| ய வாய்மை இன்ப ஆர்அமுது இறைவன் செவிமுதல் துன்பம் நீங்கச் சொரியும் அந்நாள் நின்பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு நீங்காக் காதல் பாங்கன் ஆதலின் தங்கா நல்அறம் தானும் கேட்டு முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றித் தன்னான் இயன்ற தனம்பல கோடி எழுநாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்துத் தொழுதவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய வான்ஓங்கு சிமையத்து வால்ஒளிச் சயித்தம் ஈனோர்க்கு எல்லாம் இடர்கெட இயன்றது கண்டுதொழுது ஏத்தும் காதலின் வந்துஇத் தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக் காவிரிப் பட்டினம் கடல்கொளும் என்றஅத் தூஉரை கேட்டுத் துணிந்துஇவண் இருந்தது இன்னும் கேளாய் நல்நெறி மாதே தீவினை உருப்பச் சென்றநின் தாதையும் தேவரில் தோன்றிமுன் செய்தவப் பயத்தால் ஆங்குஅத் தீவினை இன்னும் துய்த்துப் பூங்கொடி முன்னவன் போதியில் நல்அறம் தாங்கிய தவத்தால் தான்தவம் தாங்கிக் காதலி தன்னொடு கபிலையம் பதியில் நாதன் நல்அறம் கேட்டுவீடு எய்தும்என்று அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச் சொல்பயன் உணர்ந்தேன் தோகை யானும் அந்நாள் ஆங்குஅவன் அறநெறி |