மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   152
Zoom In NormalZoom Out

சினைத் திருமணிப் பாசடைப்
பைம்பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்காகத்
தாதுஅணி பூம்பொழில் தான்சென்று எய்தலும்
வையம் காவலன் தன்பால் சென்று
கைதொழுது இறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன்
கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவலம் தீவில் தான்நனி மிக்கோள்
அங்கையின் ஏந்திய அமுத சுரபியொடு
தங்காது இப்பதித் தருமத வனத்தே
வந்து தோன்றினள் மாமழை போல்என
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக்
கந்திற் பாவை கட்டுரை எல்லாம்
வாய்ஆ கின்றன வந்தித்து ஏத்தி
ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று
செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ
கொங்குஅவிழ் குழலார் கற்புக்குறை பட்டோ
நலத்தகை நல்லாய் நல்நாடு எல்லாம்
அலத்தல் காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர்ஓர் மாதெய்வம் தோன்றி
உயங்காது ஒழிநின் உயர்தவத் தால்ஓர்
காரிகை தோன்றும் அவள்பெருங் கடிஞையின்
ஆர்உயிர் மருந்தால் அகல்நிலம் உய்யும்
ஆங்குஅவள் அருளால் அமரர்கோன் ஏவலில்
தாங்கா மாரியும் தான்நனி பொழியும்
அந்நாள் இந்த அகநகர் புகுந்த
பின்நாள்