| நிகழும் பேர்அறம் பலவால் கார்வறம் கூரினும் நீர்வறம் கூராது பாரக விதியில் பண்டையோர் இழைத்த கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு மாமணி பல்லவம் வந்தது ஈங்குஎனப் பொய்கையும் பொழிலும் புனைமின்என்று அறைந்ததுஅத் தெய்வதம் போயபின் செய்துயாம் அமைத்தது இவ்விடம் என்றே அவ்விடம் காட்ட அத் தீவகம் போன்ற காஅகம் பொருந்திக் கண்டுஉளம் சிறந்த காரிகை நல்லாள் பண்டைஎம் பிறப்பினைப் பான்மையில் காட்டிய அங்குஅப் பீடிகை இதுஎன அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத் தீவ திலகையும் திருமணி மேகலா மாபெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து விழவும் சிறப்பும் வேந்தன் இயற்றத் தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப் பங்கயப் பீடிகை பசிப்பிணி மருந்துஎனும் அங்கையின் ஏந்திய அமுத சுரபியை வைத்துநின்று எல்லா உயிரும் வருகெனப் பைத்தரவு அல்குல் பாவைதன் கிளவியின் மொய்த்த மூவறு பாடை மாக்களில் காணார் கேளார் கால்முடம் ஆனோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசிநோய் உற்றோர் மடிநல் கூர்ந்த மாக்கள் |