மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   156
Zoom In NormalZoom Out

  
பெயரைத்
தந்தைஇட் டனன்நினைத் தையல்நின் துறவியும்
அன்றே கனவின் நனவுஎன அறைந்த
மென்பூ மேனிமணி மேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன்இடு சாபத்து
நகர்கடல் கொள்ளநின் தாயரும் யானும்
பகரும்நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம்
என்றலும் அறவணன் தாள்இணை இறைஞ்சிப்
பொன்திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவ திலகையும் இத்திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணிநகர் மருங்கே
வேற்றுஉருக் கொண்டு வெவ்வேறு உரைக்கும்
நூல்துறைச் சமய நுண்பொருள் கேட்டே
அவ்வுரு என்ன ஐவகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன
நொடிகுவென் நங்காய் நுண்ணிதின் கேள்நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம்இல் பிரத்தியம் கருத்துஅளவு என்னச்
சுட்டுணர் வைப்பிரத் தியக்கம் எனச்சொலி
விட்டனர் நாம சாதிகுணக் கிரியைகள்
மற்றவை அனுமா னத்தும்அடை யும்எனக்
காரிய காரண சாமா னியக்கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டுபிழை யாதது
கனலில் புகைபோல் காரியக் கருத்தே
ஏனை அளவைகள்