| எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமான மாம்பிற பக்கம் ஏதுத் திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்துஉள அவற்றில் பக்கம் இம்மலை நெருப்புஉடைத்து என்றல் புகைஉடைத் தாதலால் எனல்பொருந்து ஏது வகைஅமை அடுக்களை போல்திட் டாந்தம் உபநயம் மலையும் புகைஉடைத்து என்றல் நிகமனம் புகைஉடைத் தேநெருப்பு உடைத்துஎனல் நெருப்புடைத் தல்லாது யாதொன்று அதுபுகைப் பொருத்தம் இன்று புனல்போல் என்றல் மேவிய பக்கத்து மீட்சி மொழியாய் வைதன் மியதிட் டாந்தம் ஆகும் தூய காரிய ஏதுச் சுபாவம் ஆயின் சத்தம் அநித்தம் என்றல் பக்கம் பண்ணப் படுத லால்எனல் பக்க தன்ம வசனம் ஆகும் யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது அநித்தம் கடம்போல் என்றல் சபக்கத் தொடர்ச்சி யாதொன்று அநித்தம்அல் லாதது பண்ணப் படாதது ஆகாசம் போல்எனல் விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி என்க அநன்னு வயத்தில் பிரமாணம் ஆவது இவ்வெள் ளிடைக்கண் குடம்இலை என்றல் செவ்விய பக்கம் தோன்றாமை யில்எனல் பக்க தன்ம வசனம் ஆகும் இன்மையின் கண்டிலம் முயல்கோடு என்றல் அந்நெறி |