| ச் சபக்கம் யாதொன்று உண்டுஅது தோற்றரவு அடுக்கும் கைந்நெல்லி போல்எனல் ஏற்ற விபக்கத்து உரைஎனல் ஆகும் இவ்வகை ஏதுப் பொருள்சா திப்பன என்னைகா ரியம்புகை சாதித்தது என்னில் புகைஉள இடத்து நெருப்புஉண்டு என்னும் அன்னுவயத் தாலும் நெருப்புஇலா இடத்துப் புகையில்லை என்னும் வெதிரேகத் தாலும் புகைஇ நெருப்பைச் சாதித்தது என்னில் நேரிய புகையில் நிகழ்ந்துஉண் டான ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம் வாய்த்த நெருப்பின்வரு காரியம் ஆதலின் மேல்நோக் கிக்கறுத்து இருப்பபகைத்து இருப்ப தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும் |