மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   159
Zoom In NormalZoom Out

இடத்து
நரிவாலி னால்நாய் வாலைஅனு மித்தல்
அரிதாம் அதனால் அதுவும்ஆ காது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந் தத்தி லேசென்று அடங்கும்
பக்கம் ஏதுத் திட்டாந் தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உளஅதில்
வெளிப்பட் டுள்ள தன்மி யினையும்
வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம்
பிறிதில் வேறாம் வேறுபாட் டினையும்
தன்கண் சார்த்திய நயம்தருதல் உடையது
நன்குஎன் பக்கம்என நாட்டுக அதுதான்
சத்தம் அநித்தம் நித்தம்என்று ஒன்றைப்
பற்றி நாட்டப் படுவது தன்மி
சத்தம் சாத்திய தன்ம மாவது
நித்தா நித்தம் நிகழும்நல் ஏது
மூன்றாய்த் தோன்றும் ஒழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்துஉண் டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக் கின்பொருள் தன்னால் பக்கத்து
ஓதிய பொதுவகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
ஒத்த அநித்தம் கடாதி போல்எனல்
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று
அநித்தம்அல் லாதது பண்ணப் படாதது
ஆஅ காசம் போல்என்று ஆகும்
பண்ணப் படுதலும் செயலி