| டைத் தோன்றலும் நண்ணிய பக்கம் சபக்கத் திலுமாய் விபக்கத்து இன்றி அநித்தத் தினுக்கு மிகத்தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க ஏதம்இல் திட்டாந் தம்இரு வகைய சாதன் மியம்வை தன்மி யம்எனச் சாதன் மியம்எனப் படுவ அநித்தம் கடாதி அன்னுவயத்து என்கை வைதன் மியதிட் டாந்தம் சாத்தியம் எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன தீய பக்கமும் தீய ஏதுவும் தீய எடுத்துக் காட்டும் ஆவன பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள் பக்கப் போலி ஒன்பது வகைப்படும் பிரத்தி யக்க விருத்தம் அனுமான விருத்தம் சுவசன விருத்தம் உலோக விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர சித்த விசேடணம் அப்பிர சித்த விசேடியம் அப்பிர சித்த உபயம் அப்பிர சித்த சம்பந் தம்என எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம் கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும் சத்தம் செவிக்குப் புலன்அன்று என்றல் மற்றுஅனு மான விருத்தம் ஆவது கருத்தள வையைமா றாகக் கூறல் அநித்தியக் கடத்தை நித்தியம் |