| என்றல் சுவசன விருத்தம்தன் சொல்மாறி இயம்பல் என்தாய் மலடி என்றே இயம்பல் உலக விருத்தம் உலகின்மாறு ஆம்உரை இலகுமதி சந்திரன் அல்ல என்றல் ஆகம விருத்தம்தன் நூல்மாறு அறைதல் அநித்த வாதியாய் உள்ளவை சேடிகன் அநித்தி யத்தைநித் தியம்என நுவறல் அப்பிர சித்த விசேடணம் ஆவது தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக் குறித்துச் சத்தம் விநாசி என்றால் அவன்அவி நாச வாதி ஆதலின் சாத்திய விநாசம்அப் பிரசித்தம் ஆகும் அப்பிர சித்த விசேடியம் ஆவது எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற பௌத்தனைக் குறித்துஆன் மாச்சை தனியவான் என்றால் அவன்அ நான்ம வாதி ஆதலில் தன்மி அப்பிர சித்தம் அப்பிர சித்த உபயம் ஆவது மாறுஆ னோரக்குத் தன்மி சாத்தியம் ஏறாது அப்பிர சித்தமாய் இருத்தல் பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச் சுகம்முத லியதொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா என்றால் சுகமும்ஆன் மாவும் தாம்இசை யாமையில் அப்பிரசித் தோபயம் அப்பிர சித்த சம்பந்தம் ஆவது எதிரிக்கு இசைந்த பொருள் |