மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   162
Zoom In NormalZoom Out

சா தித்தல்
மாறாம் பௌத்தற்குச் சத்த அநித்தம்
கூறில் அவன்ன் கொள்கைஅஃது ஆகலில்
வேறுசா திக்க வேண்டா தாகும்.
ஏதுப் போலி ஓதின்மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந் திகம்விருத் தம்என
உபயா சித்தம் அன்னியதரா சித்தம்
சித்தா சித்தம் ஆசிரயா சித்தம்
எனநான்கு அசித்தம் உபயா சித்தம்
சாதன ஏது இருவர்க்கும் இன்றிச்
சத்தம் அநித்தம் கண்புலத்து என்றல்
அன்னியதரா சித்தம் மாறாய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
சத்தம் செயல்உறல் அநித்தம் என்னின்
சித்த வெளிப்பாடு அல்லது செயல்உறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்தா சித்தம் ஆவது
ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல்
ஆவி பனிஎன ஐயுறா நின்றே
தூய புகைநெருப்பு உண்டுஎனத் துணிதல்
ஆசிரயா சித்தம் மாறா னவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்பாற்குத்
தன்மி அசித்தம் அநைகாந் திகமும்
சாதா ரணம்அசா தாரணம் சபக்கைக
தேச விருத்தி விபக்க வியாபி
விபக்கைக தேச விருத்தி சபக்க
வியாபி உபயைக தேச விருத்தி
விருத்த வியபி சாரிஎ