| விபக்கத்து ஓரிடத்து உற்றுச் சபக்கத்துஒத்து இயறல் சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம்ஆ தலின்எனின் அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு விபக்க ஆகா யத்தினும் மின்னினும் மின்னின் நிகழ்ந்துஆ காசத்துக் காணாது சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய் ஏகாந்தம் அல்ல மின்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோஎனல் உபயைக தேச விருத்தி ஏதுச் சபக்கத் தினும்விபக் கத்தினும் ஆகி ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின் அமூர்த்த ஏது நித்தத் தினுக்குச் சபக்கஆ காச பரமா ணுக்களின் ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம் பரமா ணுவின்நிக ழாமை யானும் விபக்க மான கடசுகா திகளில் சுகத்து நிகழ்ந்து கடத்துஒழிந் தமையினும் ஏகதே சத்து நிகழ்வதுஏ காந்தம்அன்று அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ அமூர்த்த சுகம்போல் அநித்த மோஎனல் விருத்த வியபிசாரி திருந்தா ஏதுவாய் விருத்த ஏதுவிற் கும்இடம் கொடுத்தல் சத்தம் அநித்தம் செயல்இடைத் தோன்றலின் ஒத்த தெனினச் செயலி |