| |
சாதன் மியதிட் டாந்தஆ பாசம் ஓதில் ஐந்து வகைஉள தாகும் சாதன தன்ம விகலமும் சாத்திய தன்ம விகலமும் உபய தன்ம விகலமும் அநன்னு வயவிப ரீதான் னுவயம் என்ன வைதன் மியதிட் டாந்த ஆபா சமும்ஐ வகைய சாத்தி யாவி யாவி ருத்தி சாத னாவி யாவி ருத்தி உபயாவி யாவிருத்தி அவ்வெதி ரேகம் விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள் சாதன தன்ம விகலம் ஆவது திட்டாந் தத்தில் சாதனம் குறைவது சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான் யாதொன்று யாதொன்று அமூர்த்தம்அது நித்தம் ஆதலால் காண்புற்றது பரமாணு வில்எனில் திட்டாந்த தப்பர மாணு நித்தத் தோடு அமூர்த்தம் ஆதலால் சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச் சாதன தன்மஅமூர்த் தத்துவம் குறையும் சாத்திய தன்மம் விகலம் ஆவது காட்டப் பட்ட திட்டாந் தத்தில் சாத்திய தன்மம் குறைவு படுதல் சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால் யாதொன்று யாதொன்று அமூர்த்தம் |