| யாதொன்று அநித்தம்அது கிருத்தம்என வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல் அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை இன்றியும் நிகழ்த லின்விப ரீதமாம் வைதன்மிய திட்டாந் தத்துச் சாத்தி யாவியா விருத்தி யாவது சாதன தன்மம் மீண்டு சாத்திய தன்மம் மீளாது ஒழிதல் சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் யாதொன்று யாதொன்று நித்தமும் அன்றுஅது அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்எனின் அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட பரமாணு நித்தமாய் மூர்த்தம் ஆதலின் சாதன அமூர்த்தம் மீண்டு சாத்திய நித்தம் மீளாது ஒழிதல் சாத னாவியா விருத்தி யாவது சாத்திய தன்மம் மீண்டு சாதன தன்மம் மீளாது ஒழிதல் சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால் யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால் வைதன் மியதிட் டாந்த மாகக் காட்டப் பட்ட கன்மம் அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின் சாத்திய மான நித்தியம் மீண்டு சாதன மான அமூர்த்தம் மீளாது உபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட வைதன் மியதிட் டாந்தத்தி னின்று சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும் உண்மையி |