| சாத்தியம் இல்லா விடத்துச் சாதனம் இன்மை சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம் நித்தம் பண்ணப் படாமையால் என்றால் யாதொன்று யாதொன்று நித்தம் அன்று பண்ணப் படுவது அல்லா ததுவும் அன்றுஎனும் இவ்வெதி ரேகம் தெரியச் சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப் படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான் என்னின் வெதிரே கம்தெரி யாது விபரீத வெதிரேகம் ஆவது பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல் சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின் என்றால் என்று நின்ற இடத்து யாதோர் இடத்து நித்தமும் இல்லைஅவ் விடத்து மூர்த்தமும் இல்லை எனாதே யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லைஅவ் விடத்து நித்தமும் இல்லை என்றால் வெதிரேகம் மாறு கொள்ளும்எனக் கொள்க நாட்டிய இப்படித் தீயசா தனத்தால் காட்டும் அனுமான ஆபா சத்தின் மெய்யும் பொய்யும் இத்திற விதியால் ஐயம் இன்றி அறிந்துகொள் ஆய்ந்துஎன். தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை முற்றிற்று. |