| ஈ ராறும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார் ஆயின் ஆழ்நரகு அறிகுவர் பேதைமை என்பது யாதுஎன வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயல்கோடு உண்டுஎனக் கேட்டது தெளிதல் உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில பல்உயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே நல்வினை தீவினை என்றுஇரு வகையால் சொல்லப் பட்ட கருவில் சார்தலும் கருவில் பட்ட பொழு கவலையும் காட்டும் தீவினை என்பது யாதுஎன வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்குஅது கேளாய் கொலையே களவே காமத் தீவிழை உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்எனச் சொல்லிற் தோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சிஎன்று உள்ளம் தன்னின் உருப்பன மூன்றும்எனப் பத்து வகையால் பயன்தெரி புலவர் இத்திறம் படரார் படர்குவர் ஆயின் விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் |