| தோன்றுவர் நல்வினை என்பது யாதுஎன வினவின் சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானம் தலைநின்று உணர்வுஎனப் படுவது உறங்குவோர் உணர்வின் புரிவுஇன்று ஆகிப் புலன்கொளா ததுவே அருவுரு என்பதுஅவ் வுணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப வாயில் ஆறும் ஆயும் காலை உள்ளம் உறுவிக்க உறும்இடன் ஆகும் ஊறுஎன உரைப்பது உள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுதல் என்ப நுகர்வே உணர்வு புலன்களை நுகர்தல் வேட்கை விரும்பி நுகர்ச்சிஆ தருமுறை இதுஎனத் தாம்தாம் சார்தல் பிறப்புஎனப் படுவதுஅக் கருமப் பெற்றியின் உறப்புணர் உள்ளம் சார்பொடு கதிகளில் காரண காரிய உருக்களில் தோன்றல் பிணிஎனப் படுவது சார்பில் பிறிதாய் இயற்கையின் திரிந்துஉடம்பு இடும்பை புரிதல் மூப்புஎன மொழிவது அந்தத்து அளவும் தாக்குநிலை யாமையின் தாம்தளர்ந் திடுதல் சாக்காடு என்பது |