மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   178
Zoom In NormalZoom Out

  
ளும் பிறப்புப் பிணிமூப்புச்
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்றுஇக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும்இவ் வகையான் மீட்சி
ஆதிக் கண்டம் ஆகும் என்ப
பேதைமை செய்கை என்றுஇவை இரண்டும்
காரண வகைய ஆத லானே
இரண்டாம் கண்டம் ஆகும் என்ப
உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே
நுகர்ச்சி என்று நோக்கப் படுவன
முன்னவற்று இயல்பால் துன்னிய ஆதலின்
மூன்றாம் கண்டம் வேட்கை பற்றுக்
கரும ஈட்டம் எனக்கட் டுரைப்பவை
மற்றுஅப் பெற்றி நுகர்ச்சி ஒழுக்கினுள்
குற்றமும் வினையும் ஆக லானே
நான்காம் கண்டம் பிறப்பே பிணியே
மூப்பே சாவுஎன மொழிந்திடும் துன்பம்
எனஇவை பிறப்பில் உழக்குபயன் ஆதலின்
பிறப்பின் முதல்உணர்வு ஆதிச் சந்தி
நுகர்ச்சி ஒழுக்கொடு விழைவின் கூட்டம்
புகர்ச்சிஇன்று அறிவது இரண்டாம் சந்தி
கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை
முன்னிச் செல்வது மூன்றாம் சந்தி
மூன்றுவகைப் பிறப்பு