மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   179
Zoom In NormalZoom Out

 
 
மொழியுங் காலை
ஆன்றபிற மார்க்கத்து ஆய உணர்வே
தோன்றல் வீடுஎனத் துணிந்து தோன்றியும்
உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும்
உணர்வும் உருவும் உடங்கத் தோன்றிப்
புணர்தரு மக்கள் தெய்வம்விலங்கு ஆகையும்
கால மூன்றும் கருதுங் காலை
இறந்த காலம் என்னல் வேண்டும்
மறந்த பேதைமை செய்கையால் அவற்றை
நிகழ்ந்த காலம்என நேரப் படுமே
உணர்வே அருவுரு வாயில் ஊறே
நுகர்வே வேட்கை பற்றே பவமே
தோற்றம் என்றுஇவை சொல்லுங் காலை
எதிர்கா லம்என இசைக்கப் படுமே
பிறப்பே பிணியே மூப்பே சாவே
அவலம் அரற்றுக் கவலைகை யாறுகள்
குலவிய குற்றம்எனக் கூறப் படுமே
அவாவே பற்றே பேதைமை என்றுஇவை
புனையும்அடை பவமும் வினைசெயல் ஆகும்
உணர்ச்சி அருவுரு வாயில் ஊறே
நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவுஇவை
நிகழ்ச்சிப்பயன் ஆங்கே நேருங் காலைக்
குற்றமும் வினையும் பயனும் துன்பம்
பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா
எப்பொரு ளுக்கும்