| ஆன்மா இலைஎன இப்படி உணரும் இவைவீட் டியல்பாம். உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே அவலம் அரற்றுக் கவலைகை யாறுஎன நுவலப் படுவன நோயா கும்மே அந்நோய் தனக்குப் பேதைமை செய்கை அவாவே பற்றுக் கரும ஈட்டம்இவை காரணம் ஆகும் துன்பம் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றுஇலி காரணம் ஒன்றிய உரையே வாய்மை நான்காவது உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவுஇவை ஐங்கந்தம் ஆவன அறுவகை வழக்கு மறுஇன்று கிளப்பின் தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும் இயைந்த உண்மை வழக்கும் இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த உண்மை வழக்கும் இல்லது சார்ந்த இன்மை வழக்கும் உள்ளது சார்ந்த இன்மை வழக்கும் இல்லது சார்ந்த உண்மை வழக்கும்என, சொல்லிய தொகைத்திறம் உடம்புநீர் நாடு தொடர்ச்சி வித்து முளைதாள் என்றுஇந் நிகழ்ச்சியில் அவற்றை நெல்என வழங்குதல் இயல்பு மிகுத்துஉரை ஈறுடைத்து என்றும் தோன்றிற்று |