| றும் மூத்தது என்றும் மூன்றின் ஒன்றின் இயல்புமிகுத்து உரைத்தல் இயைந்துரை என்பது எழுத்துப்பல கூடச் சொல்எனத் தோற்றும் பலநாள் கூடிய எல்லையைத் திங்கள் என்று வழங்குதல் உள்வழக்கு உணர்வுஇல் வழக்கு முயல்கோடு உள்ளது சார்ந்த உள்வழக்கு ஆகும் சித்தத் துடனே ஒத்த நுகர்ச்சி உள்ளது சார்ந்த இல்வழக்கு ஆகும் சித்தம்உற் பவித்தது மின்போல் என்கை இல்லது சார்ந்த உண்மைவழக்கு ஆகும் காரணம் இன்றிக் காரியம் நேர்தல் இல்லது சார்ந்த இல்வழக்கு ஆகும் முயல்கோடு இன்மையின் தோற்றமும் இல்எனல். நான்கு நயம்எனத் தோன்றப் படுவன ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்புஎன்க. காரண காரியம் ஆகிய பொருள்களை ஒன்றா உணர்தல் ஒற்றுமை நயமாம் வீற்றுவீற் றாக வேதனை கொள்வது வேற்றுமை நயம்என வேண்டல் வேண்டும் பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு |