| ஒன்றிய காரணம் உதவுகா ரியத்தைத் தருதற்கு உள்ளம் தான்இலை என்றல் புரிவின்மை நயம்எனப் புகறல் வேண்டும் நெல்வித் தகத்துள் நெல்முளை தோற்றும்எனல் நல்ல இயல்புநயம் இவற்றில்நாம் கொள்பயன் தொக்க பொருள்அலது ஒன்றுஇல்லை என்றும் அப்பொருள் இடைப்பற்று ஆகாது என்றும் செய்வா னொடுகோட் பாடுஇலை என்றும் எய்துகா ரணத்தால் காரியம் என்றும் அதுவும் அன்றுஅது அலாததும் அன்றுஎன்றும் விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் வினாவிடை நான்குஉள துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் வினாவின் விடுத்தல் வாய்வா ளாமைஎனத் தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால் கேடுஉண்டு என்றல் துணிந்துசொலல் ஆகும் செத்தான் பிறப்பா னோபிற வானோ என்று செப்பின் பற்றுஇறந் தானோ அன்மக னோஎனல் மிகக்கூ றிட்டு மொழிதல்என விளம்புவர் வினாவின் விடுத்தல் முட்டை முந்திற்றோ பனைமுந் திற் |