மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   183
Zoom In NormalZoom Out

றோ எனக்கட் டுரைசெய்
என்றால் எம்முட்டைக்கு எப்பனை என்றல்
வாய்வா ளாமை ஆகா யப்பூப்
பழைதோ புதிதோ என்று புகல்வான்
உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
கட்டும் வீடு அதன்கா ரணத்தது
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
யாம்மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசிஎனத்
தனித்துப் பார்த்துப் பற்றுஅறுத் திடுதல்
மைத்திரி கருணா முதிதைஎன்று அறிந்து
திருந்துநல் உணர்வால் செற்றம்அற் றிடுக
சுருதி சிந்தனா பாவனா தரிசனை
கருதி உய்த்து மயக்கம் கடிக
இந்நால் வகையால் மனத்துஇருள் நீங்குஎன்று
முன்பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்ட,
தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப்
பவத்திறம் அறுகெனப் பாவைநோற்றனள்என்.
பவத்திறம் அறுக எனப் காதைமுற்றிற்று.
பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
முற்றிற்று..