| சுதமதி தன்னைத் துயில்எடுப் பியதூஉம்
ஆங்குஅத் தீவகத்து ஆயிழை நல்லாள்
தான்துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்
உழந்தோள் ஆங்கண்ஓர் ஒளிமணிப் பீடிகை
பழம்பிறப் பெல்லாம் பான்மையின் உணர்ந்ததும்
உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வம் தோன்றி
மனம்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்
தீப திலகை செவ்வனம் தோன்றி
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு
அளித்ததும்,
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புஉறு மாதவத்து அறவணர்த் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத் திரன்திறம்,
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்,
அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பாற்
சிந்தா தேவி கொடுத்த வண்ண
|