| மும்
மற்றுஅப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப்
பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும்
பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று
ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும்,
அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே
கொங்குஅலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி
மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
அறம்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
காயசண் டிகைஎன விஞ்சைக் காஞ்சனன்
ஆயிழை தன்னை அகலாது அணுகலும்
வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை
மைந்துஉடை வாளில் தப்பிய வண்ணமும்
ஐஅரி உண்கண் அவன்துயர் பொறாஅள்
தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும்
அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச்
|