மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   193
Zoom In NormalZoom Out

கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என்.

பதிகம் முற்றிற்று.

உலகம் திரியா ஓங்குஉயர் விழுச்சீர்ப்
பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய
ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று
மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நால்ஏழ் நாளினும் நன்குஇனிது உறைகென
அமரர் தலைவன் ஆங்குஅது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடுஎனும்
இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும்