| சுகடிப் பிடூஉம் முதுக்குடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென்று ஏத்தி
வானமும் மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குஉள
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து
மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள்
இந்நகர் போல்வதுஓர் இயல்பினது ஆகிப்
பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது
தொல்நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்,
தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
காய்க்
|