மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   196
Zoom In NormalZoom Out

குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின
விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈ றாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து