மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   197
Zoom In NormalZoom Out

ஏறுமின்
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும்
நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என்
ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பிப்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
அணிவிழா அறைந்தனன் அகநகர் மங்குஎன்.