| வர் பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து அத்திறத் தாளும் அல்லள்எம் ஆயிழை கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை திண்ணிதில் திருகித் தீஅழல் பொத்திக் காவலன் பேர்ஊர் கனைஎரி ஊட்டிய மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் ஆங்ஙனம் அன்றியும் ஆயிழை கேளாய் ஈங்குஇம் மாதவர் உறைவிடம் புகுந்தேன் மறவணம் நீத்த மாசுஅறு கேள்வி அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து மாபெருந் துன்பம் கொண்டுஉளம் மயங்கிக் காதலன் உற்ற கடுந்துயர் கூறப் பிறந்தோர் உறுவது பெருகிய |