| வயந்த மாலைக்கு மாதவி உரைத்த உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி மாமலர் நாற்றம் போல்மணி மேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின் தந்தையும் தாயும் தாம்நனி உழந்த வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்பக் காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை மாதர் செங்கண் வரிவனப்பு அழித்துப் புலம்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர் இலங்குஇதழ் மாலையை இட்டுநீ ராட்ட, மாதவி மணிமே கலைமுகம் நோக்கித் தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையில் கண்ணீர் மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும் மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடு |