| என் பான்ஓர் விஞ்சையன் திருவிழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் எடுத்தனன் என்கொணடு் எழுந்தனன் விசும்பில் படுத்தனன் ஆங்குஅவன் பான்மையேன் ஆயினேன் ஆங்குஅவன் ஈங்குஎனை அகன்றுகண் மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும் மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான் தனித்துஅலர் கொய்யும் தகைமையள் அல்லள் பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந் திகையின் எயில்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குஉளர். விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள் மண் |