மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   206
Zoom In NormalZoom Out

ணவர் விழையார் வானவர் அல்லது
பாடுவண்டு இமிரா பல்மரம் யாவையும்
வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்
கைபெய் பாசத்துப் பூதம் காக்கும்என்று
உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்புடை முதுமைய தாக்குஅணங்கு உடைய
யாப்புடைத்து ஆக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர்உயிர் ஓம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்
பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும்
உவவனம் என்பதுஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்புஅறை போகாது மெய்புறத்து இடூஉம்