மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   207
Zoom In NormalZoom Out

பளிக்கறை மண்டபம் உண்டுஅதன் உள்ளது
தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த
தாமரைப் பீடிகை தான்உண்டு ஆங்குஇடின்
அரும்புஅவிழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்புஇனம் மூசா தொல்யாண்டு கழியினும்
மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய்
கடம்பூண்டுஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்
ஆங்குஅவர் அடிக்குஇடின் அவர்அடி தான்உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பில ராய்இடின்
ஈங்குஇதன் காரணம் என்னை என்றியேல்
சிந்தை இன்றியும் செய்வினை உறும்எனும்
வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய்வினை சிந்தை இன்றுஎனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது வாகவும்
பயம்கெழு மாமலர் இட்டுக் காட்ட
மயன்பண்டு் இழை