| த்த மரபினது அதுதான் அவ்வனம் அல்லது அணியிழை நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மை தான்இலள் மணிமே கலையொடு மாமலர் கொய்ய அணியிழை நல்லாய் யானும் போவல்என்று அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇச் சிமிலிக் கரண்டையன் நுழைகோல் பிரம்பினன் தவல்அருஞ் சிறப்பின் அராந்தா ணத்துஉளோன் நாணமும் உடையும் நன்கனம் நீத்துக் காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி உண்ணா நோன்போடு உயவல் யானையின் |