மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   209
Zoom In NormalZoom Out

மண்ணா மேனியன் வருவோன் தன்னை
வந்தீர் அடிகள்நும் மலர்அடி தொழுதேன்
எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ
அழுக்குஉடை யாக்கையில் புகுந்த நும்உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்றுஉளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும்
தன்வயின் தரூஉம்என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின்
விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே
உண்டு தெளிந்துஇவ் யோகத்து உறுபயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம்என
உண்ணா நோன்பி தன்னொடும் சூள்உற்று
உண்ம்என இரக்கும்ஓர் களிமகன் பின்னரும்
கணவிரி மாலையில் கட்டிய திரள்புயன்
குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு