| சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன் வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உரீஇப் பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்தாங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும் ஒருசிறை ஒதுங்கி நீடலும் நீடும் நிழலொடு மறலும் மையல் உற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டுநிற் குநரும் சுரியல் தாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை ஒள்அரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல் காந்தள்அம் செங்கை ஏந்துஇள வனமுலை அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் இகந்த வட்டு |