மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   211
Zoom In NormalZoom Out

டை எழுதுவரிக் கோலத்து
வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி
நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மைஅறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும்
விழவுஆற்றுப் படுத்த கழிபெரு வீதியில்
பொன்நாண் கோத்த நன்மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய்அணி முச்சி
மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச்
செவ்வாய்க்