மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   212
Zoom In NormalZoom Out

குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத்
தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரைப்
பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து
இலங்குதொடி நல்லார் சிலர்நின்று ஏற்றி
ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள்
காண்மி னோஎனக் கண்டுநிற் குநரும்
விராடன் பேர்ஊர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமே கலைதனை வந்துபுறம் சுற்றி
அணியமை தோற்றத்து அருந்தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவுஇலள் ஈங்குஇவள்
மாமலர் கொய்ய மலர்வன