| ம் தான்புகின் நல்இள அன்னம் நாணாது ஆங்குஉள வல்லுந கொல்லோ மடந்தை தன்நடை மாமயில் ஆங்குஉள வந்துமுன் நிற்பன சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன் பைங்கிளி தாம்உள பாவைதன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ இசையுந அல்ல என்றுஇவை சொல்லி யாவரும் இனைந்துஉகச் செந்தளிர்ச் சேவடி நிலம்வடு உறாமல் குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும் பிடவமும் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்பகமும் எரிமலர் இலவமும் |