மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   217
Zoom In NormalZoom Out

றென
விடுபரிக் குதிரையின் விரைந்துசென்று எய்திக்
கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி
அணித்தேர்த் தானையொடு அரசிளங் குமரன்
மணித்தேர்க் கொடுஞ்சி கையால் பற்றிக்
கார்அலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியில் சாற்றினன் வருவோன்
நாடக மடந்தையர் நலங்கெழு வீதி
ஆடகச் செய்வினை மாடத்து ஆங்கண்
சாளரம் பொளித்த கால்போகு பெருவழி
வீதிமருங்கு இயன்ற பூஅணைப் பள்ளித்
தகரக் குழலாள் தன்னொடு மயங்கி
மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தோன் தன்னை
மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய்
யாதுநீ உற்ற இடுக்கண் என்றலும்,
ஆங்குஅது கேட்டு வீங்குஇள முலையொடு
பாங்கில் சென்று தான்தொழுது