மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   218
Zoom In NormalZoom Out

ஏத்தி
மட்டுஅவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டி குமரன் எய்தியது உரைப்போன்
வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல்
தகைநலம் வாடி மலர்வனம் புகூஉ
மாதவி பயந்த மணிமே கலையொடு
கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற
நெஞ்சுஇறை கொண்ட நீர்மையை நீக்கி
வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது
இதுயான் உற்ற இடும்பை என்றலும்
மதுமலர்த் தாரோன் மனம்மகிழ் எய்தி
ஆங்குஅவள் தன்னைஎன் அணித்தேர் ஏற்றி
ஈங்குயான் வருவேன் என்றுஅவற்கு உரைத்து ஆங்கு
ஓடுமழை கிழியும் மதியம் போல
மாட வீதியின் மணித்தேர் கடைஇக்
கார்அணி பூம்பொழில் கடைமுகம் குறுகஅத்
தேர்ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும்
சித்திரா பதியோடு உதய குமரன்உற்று
என்மேல் வைத்த உள்