| ளத் தான்என வயந்த மாலை மாதவிக்கு ஒருநாள் கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் ஆங்குஅவன் தேர்ஒலி போலும் ஆயிழை ஈங்குஎன் செவிமுதல் இசைத்ததுஎன் செய்கென அமுதுஉறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும் சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென்று ஒளித்து அறை தாழ்கோத்து உள்ளகத்து இரீஇ ஆங்குஅது தனக்குஓர் ஐவிலின் கிடக்கை நீங்காது நின்ற நேர்இழை தன்னைக் கல்என் தானையொடு கடுந்தேர் நிறுத்திப் பல்மலர்ப் பூம்பொழில் பகல்முளைத் ததுபோல்பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசிளங் குமரன் ஆரும்இல் ஒருசிறை ஒருதனி நின்றாய் உன்திறம் அறிந்தேன். வளர்இள வனமுலை மடந்தை |