மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   221
Zoom In NormalZoom Out

புனைவன நீங்கில் புலால்புறத்து இடுவது
மூப்புவிளிவு உடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம்
புற்றஅடங்கு அரவின் செற்றச் சேக்கை.
அவலக் கவனா கையாறு அழுங்கல்
தவலா உள்ளம் தன்பால் உடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்
என்று அவள் உரைத்த இசைபடு தீஞ்சொல்
சென்று அவன் உள்ளம் சேரா முன்னர்ப்
பளிங்குபுறத்து எறிந்த பவளப் பாவையின்
இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்என். இளங்கோன் கண்ட இளம்பொன் பூங்கொடி
விளங்குஒளி மேனி விண்ணவர் வியப்பப்
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரைமலர் ஐங்கணை மீன