| விலோதனத்து உருவி லாளனொடு உருவம் பெயர்ப்ப ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் காவியங் கண்ணி ஆகுதல் தெளிந்து தாழ்ஒளி மண்டபம் தன்கையில் தடைஇச் சூழ்வோன் சுதமதி தன்முகம் நோக்கிச் சித்திரக் கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத் தாள்நின் இளங்கொடி உரைஎனக் குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின் முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி காமன் கடந்த வாய்மையள் என்றே தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்பச் சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின் செவ்வியள் ஆயின்என் செவ்வியள் ஆகென |