மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   223
Zoom In NormalZoom Out

அவ்விய நெஞ்சமொடு அகல்வோன் ஆயிடை
அம்செஞ் சாயல் அராந்தா ணத்துள்ஓர்
விஞ்சையன் இட்ட விளங்குஇழை என்றே
கல்என் பேரூர்ப் பல்லோர் உரையினை
ஆங்குஅவர் உறைவிடம் நீங்கி ஆயிழை
ஈங்குஇவள் தன்னோடு எய்தியது உரைஎன
வார்கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி
தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி
ஈங்குஇவள் தன்னோடு எய்திய காரணம்
வீங்குநீர் ஞாலம் ஆள்வோய் கேட்டருள்
யாப்புஉடை உள்ளத்து எம்அனை இழந்தோன்
பார்ப்பன முதுமகன் படிம உண்டியன்
மழைவளம் தரூஉம் அழல்ஓம் பாளன்
பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய
என்கெடுத்து இரங்கித் தன்தக வுடைமையின்
குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்