மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   224
Zoom In NormalZoom Out

களொடு தேடினன் பெயர்வோன்
கடன்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய
வடமொழி யாளரொடு வருவோன் கண்டுஈங்கு
யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே
தாங்காக் கண்ணீர் என்தலை உதிர்த்துஆங்கு
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்
காதலன் ஆதலின் கைவிட லீயான்
இரந்து ஊண் தலைக்கொண்டு இந்நகர் மருங்கில்
பரந்துபடு மனைதொறும் திரிவோன் ஒருநாள்
புனிற்றுஆப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்
கணவிரி மாலை கைக்கொண் டென்ன
நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி
என்மகள் இருந்த இடமென்று எண்ணித்
தன்உறு துன்பம் தாங்காது புகுந்து
சமணீர் காள்நும் சரண்என் றோனை
இவண்நீர் அல்லஎன்று என்னொடும் வெகுண்டு
மைஅறு படிவத்து மாதவர் புறத்து