| எமைக் கைஉதிர்க் கோடலின் கண்நிறை நீரேம் அறவோர் உளீரோ ஆரும்இ லோம்எனப் புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற மங்குல்தோய் மாடம் மனைதொறும் புகூஉம் அங்கையில் கொண்ட பாத்திரம் உடையோன் கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன் பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன் என்உற் றனிரோ என்றுஎமை நோக்கி அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்துத் தன்கைப் பாத்திரம் என்கைத் தந்துஆங்கு எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலைஏற்றி மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன் தவமுனி சங்க தருமன் தான் |