| எமக்கு அருளிய எங்கோன் இயல்குணன் ஏதம்இல் குணப்பொருள் உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்குஎன வாழாப் பிறர்க்குஉரி யாளன் இன்பச் செவ்வி மன்பதை எய்த அருள்அறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதிர் ஆழிதிறப்பட உருட்டிக் காமன் கடந்த வாமன் பாதம் தகைபா ராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் வேந்தே வாழ்கென அம்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன் வஞ்சி நுண்இடை மணிமே கலைதனைச் சித்திரா பதியால் சேர்தலும் உண்டுஎன்று அப்பொழில் ஆங்குஅவன் அயர்ந்து போயபின் பளிக்குஅறை திறந்து பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக் கற்புத் தான்இலள் நல்தவ உணர்வுஇலள் வருணக் காப்புஇலள் பொரு |