| முனியாப் பெருந்தவன் கேட்டுஈங்கு அன்னை கேள்இவ் அருந்தவ முதியோள் நின்னால் வணங்கும் தன்மையள் வணங்குஎனப் பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை தொழுதனள் நிற்பஅத் தொல்மூ தாட்டி கழுமிய உவகையில் கவான்கொண் டிருந்து தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர் நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியஎன இருபால் பெயரிய உருகெழு மூதூர் ஒருநூறு வேள்வி உரவோன் தனக்குப் பெருவிழா அறைந்ததும்; பெருகியது அலர்எனச் சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் வயந்த
மாலையால் மாதவிக்கு உரைத்ததும்; மணிமே கலை |