மணிமேகலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   531
Zoom In NormalZoom Out

டிக்கு அளித்ததும,்
பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு
யாப்புஉறு மாதவத்து அறவணர்த் தொழுததும்
அறவண அடிகள் ஆபுத் திரன்திறம்,
நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும்,
அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பாற்
சிந்தா தேவி கொடுத்த வண்ணமும்
மற்றுஅப் பாத்திரம் மடக்கொடி ஏந்திப்
பிச்சைக்கு அவ்வூர்ப் பெருந்தெரு அடைந்ததும்
பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில்
பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும்
காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று
ஆனைத் தீக்கெடுத்து அம்பலம் அடைந்ததும்,
அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே
கொங்குஅலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்
அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன்
வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி
மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம்
அறம்செய் கோட்டம்